மாமியாருடன் கள்ளக்காதல்.. அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த தம்பி.. திருவள்ளூரில் பரபரப்பு

 
Ponneri

பொன்னேரி அருகே தம்பியின் மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (33). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). இந்த நிலையில், நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

murder

அப்போது திடீரென தம்பி தேவேந்திரன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் சிவகுமாரை வெட்ட முயன்றார். உடனே சிவகுமார் அங்கிருந்து தப்பி பக்கத்தில் உள்ள வயல்வெளியில் ஓடினார். ஆனாலும் விடாமல் தேவேந்திரன் தனது நண்பர்களுடன் சிவகுமாரை ஓட ஓட துரத்தி சென்று பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

வெட்டுகாயம் அடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார் சிவகுமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அண்ணனை படுகொலை செய்த தப்பி தேவேந்திரன் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Ponneri PS

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அதில், எனது மாமியாருக்கும் அண்ணன் சிவகுமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை பலமுறை கண்டித்தும் சிவகுமார் கள்ளக்காதலை விடவில்லை. தொடர்ந்து எனது மாமியாருடன் தகாத உறவில் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். தேவேந்திரனை கைது செய்த போலீசார் அவருடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகனை தேடி வருகின்றனர்.

From around the web