காதலியை கழுத்தை நெறித்து கொன்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொன்ற காதலன்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

 
Chennai

சென்னை குரோம்பேட்டையில் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன், அவரது பிணத்தை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன். இவரது மகள் பவுசியா (20). இவர், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர், நியூ காலனி பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் பவுசியா, தனது சொந்த ஊரை சேர்ந்த ஆஷிக் (20) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். காதலர்களுக்குள் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் நடந்து வந்துள்ளது. ஆஷிக் அடிக்கடி மாணவியின் தங்கும் விடுதிக்கு வந்து பார்த்து சென்றுள்ளார். அப்படி வரும் போது சில சமயம் சண்டையும் வாக்குவாதமும் நடப்பது உண்டாம்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நர்சிங் மாணவி பவுசியா கல்லூரிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து இருக்கிறார். நேற்று குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் காதலன் ஆஷிக் உடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி உள்ளார். ஓட்டல் அறையில் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது ஆத்திரம் அடைந்த ஆஷிக், தன் கையில் அப்போது இருந்த டி-ஷர்ட்டால் மாணவி பவுசியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ர். பின்னர் இறந்து கிடந்த காதலியை புகைப்படம் எடுத்து அதனை தனது செல்போனில் வாட்ஸ் அப்பில் ‘ஸ்டேட்டஸ்’ வைத்திருக்கிறார்.

Murder

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தோழிகள் உடனடியாக ஓட்டலுக்கு வந்தார்கள். அங்கு பவுசியா இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார், உடனடியாக மாணவி பவுசியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டல் அறையிலேயே காதலியுடன் இருந்த காதலன் ஆஷிக்கையும் கைது செய்தனர்.

காதலன் ஆஷிக்கிடம், பவுசியாவை ஏன் கொன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஆஷிக் கூறிய தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதன்படி, ஆஷிக்கும், பவுசியாவும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்துள்ளனர். பவுசியாவிற்கு 15 வயது இருக்கும் போதே இருவரும் தவறு செய்துள்ளனர். இதில் பவுசியா கர்ப்பம் ஆகி உள்ளார். குழந்தையும் பிறந்தது. இதையடுத்து ஆஷிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு பிறந்த குழந்தையை கர்நாடகத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டனர். அங்குதான் குழந்தை வளர்ந்து வருகிறது.

Chrompet PS

இதனிடையே சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர். இதனிடையே பவுசியா கல்லூரிக்கு போகாமல் காதலன் ஆஷிக்குடன் கடந்த 3 நாட்களாக குரோம்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது ஆஷிக்கின் செல்போனை எதிர்பாராதவிதமாக பவுசியா பார்த்திருக்கிறார் அதில் ஆஷிக் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது. இதை கண்டு பவுசியா அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது. தன்னை பற்றிய உண்மை பவுசியாவிற்கு தெரிந்துவிட்டதே என ஆத்திரம் அடைந்த ஆஷிக், காதலி பவுசியாவின் கழுத்தை நெரித்துக்கொன்றுள்ளார். பின்னர் காதலியின் பிணத்தை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். காதலியை கொன்றவர் தப்பிக்காமல் அங்கேயே இருந்து, போலீசாரிடம் கைதாகி உள்ளார். போலீசார் தொடர்ந்து ஆஷிக்கிடம் விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை குரோம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web