மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!! மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!!
Updated: Feb 28, 2025, 12:57 IST

ராஜபாளையம் அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்துசென்ற காதல் மனைவியை, பேருந்து நிலையத்தில் வைத்து கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி மதீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையுடன் ₹11,000 அபராதமும் விதித்துள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மேடை நடனக் கலைஞரான பிரியாவை, மதீஸ்வரன் திருமணம் செய்துள்ளார்.
கருத்து வேறுபாட்டால் 2017ம் ஆண்டு பிரியா பிரிந்து சென்றதுடன், கணவருடன் இருந்த தனது மகளை தன்னிடம் ஒப்படைக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் அவரை பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டிக் கொன்றார் மதீஸ்வரன்.