மனைவி மாமியாருடன் சேர்ந்து மஜா.. மருமகன் மாமியார் மர்ம மரணம்.. மதுராந்தகம் அருகே பயங்கரம்!!

 
Perukkaranai

அச்சரப்பாக்கம் அருகே மது அருந்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெருக்கரணை, இருளர் பகுதியில் வசித்து வந்தவர் சின்னதம்பி (30). இவரது மனைவி அஞ்சலி (22). இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் சின்னத்தம்பியின் மாமியார் வசந்தா அவர்களது வீட்டில் வசித்து வந்தார். மகள், மருமகன் மற்றும் மாமியார் உள்ளிட்ட மூன்று பேருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அன்றாட கூலி வேலைக்கு சென்று வரும் இவர்கள், வேலை முடிந்த பிறகு மூவரும் இணைந்து குடிப்பதை வழக்கமாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

Perukkaranai

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல மூவரும் இணைந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அதிகளவு மது அருந்தியதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று காலையும் மது அருந்தியதாக தெரிகிறது. இதனால் நேற்று  மதியம் வரை தொடர்ந்து மது போதையில் இருந்ததாக பகுதி மக்கள் கருதியுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் போதையில் இருக்க வாய்ப்பில்லை என மதியம் சென்று பார்த்த போது, சின்னதம்பி மற்றும் அவரது மாமியார் வசந்தா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அஞ்சலி கவலைக்கிடமாக  கிடந்துள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தாமூர் போலீசார் கவலைக்கிடமாக கிடந்த அஞ்சலியை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த வசந்தா மற்றும் சின்ன தம்பி ஆகிய உடல்களை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Perukkaranai

இதுகுறித்து அஞ்சலியிடம் விசாரணை நடத்திய போலீசார் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால், போலீசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மது குடித்ததால் உயிரிழந்தார்களா இல்லை கள்ளச்சாராயம் அருந்தினார்களா இல்லை விஷம் குடித்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web