மனைவி குழந்தைகளை விட்டு தன்னுடன் வா.. தொல்லை கொடுத்த கள்ளக்காதலியை கொலை செய்த காதலன்!
சத்தீஸ்கரில் மனைவி குழந்தைகளை விட்டு தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்திய காதலியை கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் என்ற பகுதியில் வசித்து வருபவர் துர்கா த்ரித்லஹரே. தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் இவர் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேத்மதி வர்மா (46) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வேத்மதி வர்மா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், அவரது 2 பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்து தற்போது தனியே வசித்து வருகிறார். இந்த சூழலில் வேத்மதி வர்மாவுக்கு துர்கா த்ரித்லஹரேவின் அன்பும் அரவணைப்பும் ஆறுதல் கொடுத்துள்ளது. எனவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் ஒருபடி மேலே போய் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். இதனால் அவரை தன்னுடனே இருக்குமாறும், அவரது குடும்பத்தை விட்டுவிடுமாறும் துர்கா த்ரித்லஹரேவிடம், வேத்மதி வர்மா தெரிவித்துள்ளார். அதற்கு இவரோ மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இப்படியே இவர் அடிக்கடி அவரிடம் கூறி வந்துள்ளார். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதை துர்கா த்ரித்லஹரே, அவரை சமாதானம் படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த விவகாரம் குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துர்கா த்ரித்லஹரே, வீட்டில் இருந்த கயிறு ஒன்றை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதில் வேத்மதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வேத்மதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலை செய்த துர்கா த்ரித்லஹரேவையும் கைது செய்தனர். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.