நண்பரின் நுரையீரலை மசாலா தடவி சமைத்து தின்ற ஹோமோ டாக்டர்.. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் விபரீதம்!

 
Solapuram

கும்பகோணம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). இவர் திருமணம் ஆகாத நிலையில் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜன் தனது சொந்த்த ஊருக்கு சென்றுள்ளார். பாட்டி வீட்டில் பண்டிகை கொண்டாடிவிட்டு, 13-ம் தேதி சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு செல்வதாக கூறியுள்ளார்.

அசோக்ராஜன் சென்னை சென்று விட்டாரா என கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது செல்போன் எண்ணுக்கு உறவினர் மூலம் தொடர்புக் கொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சோழபுரம் கடைத்தெருவில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்று மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்ததுள்ளது. அதில், தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் எழுதியிருந்தது. ஆனால் அது அசோக்ராஜன் கையெழுத்து இல்லை என்பது தெரியவந்தது.

Murder

பின்னர் அந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் அசோக்ராஜன் ஊருக்கு வரும்போது சோழபுரம் பகுதியை சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் கேசவமூர்த்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கேசவமூர்த்தியும், அசோக்ராஜனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கேசவமூர்த்தியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்சியடைந்தனர்.

இதையடுத்து, அவரது வீட்டின் பின்பக்கம் பள்ளத்தை போலீசார் தோண்டி பார்த்தபோது, அசோக்கின் உடல் உறுப்புகளை காணவில்லை. இதனால் பதறிப்போன போலீசார், கேசவமூர்த்தி வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது, ஒரு பெட்டியில் சில எலும்புகள் இருந்துள்ளன.. இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த போலீசார், கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி தோண்ட ஆரம்பித்தனர். அப்போது, ஏராளமான எலும்புகள் கிடப்பதை கண்டு உறைந்து போனார்கள்.

அசோக் போலவே, மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தார்கள்.. முதலில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது.. அந்த மண்டை ஓடு, சோழபுரத்தில் கடந்த வருடம் காணாமல் போன அனாசின் என்பவரது என்பது உறுதியானது.

இதையடுத்து, கடந்த 2 நாட்களாகவே, தஞ்சை மாவட்ட எஸ்பி முன்னிலையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சித்த வைத்தியரின் வீட்டின் பின்புறம் முழுக்கவும் தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டு, அந்த வேலையும் நடந்து வருகிறது. போலி டாக்டர் கேசவமூர்த்திக்கு திருமணமாகி, 2 மனைவிகள் இருக்கிறார்கள். 2 பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து போய்விட்டார்களாம். கேசவமூர்த்தி எப்போதுமே, இளைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களுடன் உறவு கொள்வாராம். இவர் உறவு கொண்ட பல இளைஞர்களை காணவில்லையாம்.

இப்போது விஷயம் என்னவென்றால், கொலை செய்த அசோக்கின் உடலை துண்டு துண்டாக வெட்டி, நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை வீட்டிலேயே மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.. கடந்த வருடம் மாயமான ஆட்டோ டிரைவர் முகமது அனஸ் என்ற 26 வயது இளைஞரையும், இப்படித்தான் கொன்று, அவரது உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டிவிட்டாராம். அனைத்து பாகங்களையும் தனித்தனியாக புதைத்த நிலையில், சில முக்கியமான பாகங்களை மட்டும் கிச்சனுக்கு கொண்டு சென்று மசாலா தடவி சமைத்து சாப்பிட்டாராம். இப்படி மேலும் பலரை கொலை செய்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Solapuram PS

கேசவமூர்த்தி வீட்டில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஐந்தரை மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வீட்டின் முன்பு பகுதி மற்றும் கொல்லைபுறத்தில் இருந்த மூலிகைச்செடி உள்ளிட்ட வாழை மரங்கள் அனைத்தையும் போலீசார் அகற்றினர்.. 3 அடிக்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்திருக்கிறது.

அந்த எலும்புகள் பார்ப்பதற்கு, அச்சுஅசல் ஒரு நாயின் மண்டை ஓடு போலவே இருக்கின்றனவாம்.. இதில் சேகரிக்கப்பட்டவை எல்லாம் மனித எலும்புகளா? முகமதுஅனஸ் உடல் பாகங்களா? அல்லது வேறு இளைஞர்களின் எலும்புகளா? என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதைத்தவிர, கேசவமூர்த்தி வீட்டில் இருந்த ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பெண்கள் பயன்படுத்தும் நகைகள் மற்றும் பயன்படுத்தாத பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

இதைத்தவிர, பெண்களின் நைட்டி, டிரஸ்கள் போன்றவையும், கேசவமூர்த்தியின் வீட்டில் கிடைத்திருக்கிறது. அனைத்தையும் 10க்கும் மேற்பட்ட பெட்டிகளில் போட்டு, போலீசார் எடுத்து சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் யாருடையது என்று தெரியவில்லை.. ஆனால்,நாளுக்கு நாள் கும்பகோணம் சம்பவம் தமிழ்நாட்டிற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web