ரவுடியை ஏவி கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற காதலி.. பரபரப்பு வாக்குமூலம்!

 
Ponneri

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (24). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பொன்னேரி சின்ன கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி பிரியா (24) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து பழகி வந்த நிலையில் பிரியாவுக்கு சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரவுடியான ஜில்லா என்கிற ஆனந்தன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் பிரியா ஏற்கனவே பழகி வந்த கோபாலகிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்தார். மேலும் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னேரி அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கோபாலகிருஷ்ணனை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோபால கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder

விசாரணையில் கள்ளக்காதலியை அடையும் போட்டியில் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே புழல் அருகே காரில் தப்பி செல்ல முயன்ற பிரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரத்த கறைபடிந்த 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கோபாலகிருஷ்ணனுடன் உள்ள தொடர்பை பிரியா தவிர்த்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு உள்ளது. கோபாலகிருஷ்ணன், பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி உள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளார். இதையடுத்து கோபாலகிருஷ்ணனை தீர்த்துகட்ட முடிவு செய்த பிரியா இதுகுறித்து தனது மற்றொரு கள்ளக்காதலனான ரவுடி ஆனந்தனிடம் கூறினார். அவரும் பிரியாவை அடையும் ஆசையில் கோபால கிருஷ்ணனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

அவர்களது திட்டப்படி பிரியா, கள்ளக்காதலன் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேர் அரிவாள் கத்தியுடன் நேற்று இரவு கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். ஆனால் கோபாலகிருஷ்ணன் நண்பர்களை பார்க்க புளியந்தோப்பு பகுதிக்கு சென்றால் அங்கு சென்று அவரை தீர்த்து கட்டிவிட்டனர். கோபாலகிருஷ்ணனை அரிவாளல் வெட்டி கொன்ற போது அருகே நின்ற கள்ளக்காதலி பிரியா அதனை ரசித்து பார்த்து உள்ளார். பின்னர் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் கொலையாளிகள் அனைவரும் பிரியாவிடம் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள்களை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.

Ponneri PS

இதைத்தொடர்ந்து தனியாக நின்ற பிரியா அவ்வழியே வந்த காரில் சவாரி கேட்டு புழல் பகுதிக்கு தப்பி சென்ற போது போலீசாரின் சோதனையில் சிக்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரியா கடந்த 10 ஆண்டுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநரான லட்சுமணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் கள்ளத் தொடர்புகள் அதிகமானதால் லட்சுமணன் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டு அவ்வப்போது வந்து தனது குழந்தைகளை மட்டும் பார்த்து சென்று உள்ளார்.

கணவர் வீட்டுக்கு வராததால் மேலும் சந்தோஷம் அடைந்த பிரியா பலருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கோபாலகிருஷ்ணன் தன்னுடன் தொடர்பை தொடர கூறியதால் ஏற்பட்ட மோதலில் அவரை மற்றொரு கள்ளக்காதலனை ஏவியே பிரியா தீர்த்து கட்டிவிட்டார். இந்த கொலையில் தலைமறைவான ரவுடி ஆனந்தன் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web