கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்... நேரில் பார்த்து கணவனை 25 முறை கத்தியால் குத்திய காதல் மணைவி!!

 
Nagarasampatti

போச்சம்பள்ளி அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை கண்ட கணவனை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி அடுத்துள்ள என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கந்தன் (35). டைல்ஸ் வியாபாரி. மேலும் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்தும் ஓட்டி வந்தார். இவரும், சந்தியா (27) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கந்தன் அடிக்கடி வேலைக்காக வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விடுவார். 

நேற்று முன்தினம் இரவு கந்தனின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அங்கு கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் கந்தன் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை தூக்கி கொண்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகரசம்பட்டி போலீசார் கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கந்தனை அவருடைய மனைவி சந்தியா, கள்ளக்காதலன் சிவசக்தியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தியா, சிவசக்தி இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

Nagarasampatti

விசாரணையில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட கந்தன் - சந்தியா தம்பதியினர் மகிழ்ச்சியாக ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தனர். பின்னர் வேலை நிமித்தமாக அடிக்கடி கந்தன் வெளியூர் சென்று வந்தார். அப்போது சந்தியா வீட்டில் தனியாக இருந்து வந்தார். அந்த நேரம் அவருடைய வீட்டிற்கு என். தட்டக்கல்லைச் சேர்ந்த சிவசக்தி (23) என்பவர் பால் பாக்கெட் வாங்கி கொடுத்து வந்தார். 

இதனால் சந்தியா- சிவசக்தி இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஊரில் அரசல்புரசலாக தெரியவந்தது. அந்த தகவல் கந்தனின் காதுக்கும் எட்டியது. மேலும் தனது மனைவியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட கந்தன், அவரை கண்காணிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் ஒரு நாள் அவர், மனைவியின் செல்போனை பிடுங்கி பார்த்தார். அப்போது சிவசக்தியுடன் அடிக்கடி வாட்ஸ்அப் வீடியோ காலில் சந்தியா பேசியதை கண்டு கந்தன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மனைவியிடம் கள்ளக்காதலை கைவிட்டு திருந்தி வாழ் என்று எச்சரித்தார். ஆனாலும் சந்தியா கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கந்தன் வெளியூருக்கு வண்டியை எடுத்து செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். கணவர் எப்போது செல்வார் என்று காத்து கொண்டிருந்த சந்தியா அவர் சென்ற உடனே தனது கள்ளக்காதலன் சிவசக்தியை தனது வீட்டிற்கு உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார். உடனே சிவசக்தியும் சந்தியாவின் வீட்டிற்கு சென்றார். 

Nagarasampatti PS

இந்த நிலையில் கந்தன் வேலைக்கு செல்லாமல் இரவு 10 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார். அந்த நேரம் வீட்டில் சந்தியா, சிவசக்தியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்தார். இதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கந்தன் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலன் சிவசக்தியை கண்டித்தார். மேலும் கந்தன் ஆத்திரத்தில் மனைவியை அடித்தார். அப்போது சிவசக்தியும், சந்தியாவும் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கந்தனின் கண்ணில் தூவினார்கள். 

பின்னர் கந்தனின் வாயை மூடிய அவர்கள், வீட்டில் காய்கறிகள் வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்து பகுதியில் பலமாக 25 முறை குத்தினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் கந்தன் சரிந்து விழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த சந்தியாவும், சிவசக்தியும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கந்தன் காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். ஆனாலும் போலீசாரின் விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

From around the web