போதைப் பொருட்களுடன் 5 பேர் கைது!

 
methamphetamine

சென்னையில் 16 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மாதவரம் இந்தப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடந்த வாரம் மியான்மர் நாட்டிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹1.5 கோடி மதிப்புடைய போதைப்பொருள் கடத்தல் வடக்கில் வெங்கடேசன், கார்த்திக் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் தொடர்ச்சியாக தற்போது பின்னணியில் இருந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ள்னர். 5 பேர் கைது செய்யப்பட்டதுடன்,16 கிலோ போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

From around the web