ஓசூர் அருகே வளர்த்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. போக்சோவில் கைது!

 
Pregnant

ஓசூரில் 12 வயது சிறுமியை பாலியல் வளர்ப்பு தந்தையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் 29 வயது கம்பி கட்டும் தொழிலாளி சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர், சிறுமி மற்றும் அவரது தாயார் ஆகியோருடன் வசித்து வந்தார். சிறுமியை அவர் வளர்ப்பு தந்தைபோல் கவனித்து வந்தார். 

rape

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரது தாயார் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரணை நடத்தினார். அப்போது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

arrest

புகாரின் பேரில், போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web