அக்காவை பற்றி ஆபாசமாக பேசிய தந்தை.. ஆத்திரத்தில் கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொன்ற மகன்.. சென்னையில் பகீர் சம்பவம்!

 
Chennai

சென்னையில் அக்கா குறித்து தவறாக பேசிய தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முக ராஜா பகுதியில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (55). இவரது மனைவி சுப்புலட்சுமி (48). இந்த தம்பதிக்கு சுமித்ரா (28) என்ற மகளும் ஜபரீஷ் (23) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக, குடும்பத்தினர் பாலசுப்பிரமணியை வீட்டில் அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால், குடிபோதைக்கு அடிமையான பாலசுப்பிரமணி தினமும் குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும், கடந்த ஒரு வருடமாக குடும்பத்தில் இருந்து பிரிந்து பாலசுப்பிரமணி வீட்டின் கீழ் நடைபாதையில் வசித்து வந்தார்.

Cricket bat

இந்த நிலையில் நேற்று சுமித்ராவுக்கு உடல் நல பிரச்சனை ஏற்பட்டதால் அவரது தம்பி ஜபரீஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு, பின்னர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி அவரது மகன் ஜபரீஷிடம், சகோதரி சுமித்ராவை பற்றி அவதூறாக பேசி  ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜபரீஷ் அவரது தந்தை பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் வாக்குவாதம் முற்றியதில் திடீரென கீழே கிடந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கலால் தந்தை பாலசுப்பிரமணியின் தலையில் தாக்கி உள்ளார். இதில் பாலசுப்பிரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Guindy PS

இந்த சம்பவம் தொடர்பாக தனது தந்தையை கொலை செய்துவிட்டதாக கிண்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜபரீஷை கைது செய்தனர். பின்னர் இறந்துகிடந்த பாலசுப்பிரமணி உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web