நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற லாரி.. மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்த ஓட்டுநர்!

 
Muthupet

திருத்துறைப்பூண்டி அருகே நெல் அறுவடை ஏற்றிச் சென்ற லாரி மீது மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள முத்துப்பேட்டை தாலுகா சிறுபட்டாக்கரை கிராமத்தில் இருந்து ரவிக்குமார் என்பவர் நெல் அறுவடை இயந்திரத்தை லாரியில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது மன்னாரகுடி முத்துப்பேட்டை சாலையில் வந்தபோது லாரியின் மீது சாலையில் மேல் சென்ற உயர்மின்னழுத்த கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இருக்கிறது. 

shock

அதனை அறியாமல் ஓட்டுநர் ரவிக்குமார் லாரியை எடுத்துச் சென்று இருக்கிறார். அப்போது லாரிக்குள் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

Muthupet PS

பின்னர் ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதாலேயே விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web