உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு.. கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி!

 
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் காலை ஆண் பிணம் மிதந்தது. இது குறித்து கல்லுகுறுக்கி கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ், மகராஜகடை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கிணற்றில் மிதந்த உடலை மீட்டனர். அப்போது உடலுடன் கல் சேர்த்து கட்டப்பட்டு கயிற்றால் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆத்துகாவாய் கிராமத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ் (36) என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து (28) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

Murder

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தது மைக்கேல்ராஜ் என்பவரும், அவரை மனைவி ஜோஸ்பின் சிந்து மற்றும் அவரது கள்ளக்காதலன் விக்ரம் (19) என்பவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜோஸ்பின் சிந்து போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது கணவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சின்னப்ப நகர் ஆகும். கல் உடைக்கும் தொழிலாளி. எங்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நாங்கள் மகராஜகடை அருகே உள்ள ஆத்துகாவாய் பகுதிக்கு வந்தோம். இங்கு எனது கணவர் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.

அவர் வேலை செய்த அதே குவாரியில் கல் உடைக்கும் வேலைக்கு கிருஷ்ணகிரி தர்மராஜா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் விக்ரம் என்பவர் வேலைக்கு வந்தார். அவர் எனது கணவருடன் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் அடிக்கடி என்னுடன் வந்து உல்லாசமாக இருப்பார்.

இந்த விஷயம் எனது கணவருக்கு சமீபத்தில் தெரியவந்தது. அவர் என்னை கண்டித்தார். அவனுடன் உள்ள கள்ளத்தொடர்பை இத்துடன் விட்டு விடு என்று என்னை மிரட்டினார். இது குறித்து நான் எனது கள்ளக்காதலன் விக்ரமிடம் கூறினேன். இதையடுத்து எனது கணவரை கொலை செய்து விட்டால், இனிமேல் நாம் உல்லாச வாழ்க்கை நடத்தலாம். நமது உல்லாச வாழ்க்கைக்கு யாரும் குறுக்கே வர மாட்டார்கள் என கூறினான்.

Police

அதன்படி எனது கணவரை தீர்த்து கட்ட நாங்கள் திட்டமிட்டோம். இந்த நிலையில் வீட்டில் எனது கணவர் இருக்கும் தகவலை விக்ரமுக்கு தெரிவித்தேன். அவன் வந்தான். பின்னர் நாங்கள் 2 பேரும் சேர்ந்து எனது கணவர் மைக்கேல்ராஜே அடித்தே கொலை செய்தோம். பின்னர் உடலை அங்கிருந்து கள்ளநாயக்கன்பள்ளம் பகுதிக்கு கொண்டு வந்தோம். அதன் பிறகு நாங்கள் வைத்திருந்த கயிற்றை எடுத்து உடலை கல்லில் கட்டி கிணற்றில் தூக்கி போட்டு விட்டோம்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் நாங்கள் வீட்டிற்கு வந்து விட்டோம். உடலில் கல்லை கட்டி கிணற்றில் போட்டால் உடல் மேலே வராது என யாருக்கும் தெரியாது என்று நினைத்தோம். ஆனால் உடல் மேலே வந்ததால் போலீசார் விசாரிக்க தொடங்கி நாங்கள் மாட்டிக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

கைதான ஜோஸ்பின் சிந்து மற்றும் அவரது கள்ளக்காதலன் விக்ரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web