திருவிழாவில் தகராறு.. ஓட ஓட டியூப் லைட்டுகளால் கொலை வெறி தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ

 
Vikravandi

விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் டியூப் லைட்டுகளால் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டு காலனியைச் சேர்ந்தவர் ரமணா (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உத்திரவேல் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

திருவிழா கூட்டத்தில் ரமணா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், நடந்து சென்ற உத்திரவேல் மகன் சித்தார்த் (7) மீது மோதியது. இதில் சிறுவன் காயமடைந்தான். இதை தட்டிக்கேட்டதால் உத்திரவேல் தரப்பினருக்கும், ரமணா தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் டியூப் லைட்டுகளால் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த முருகன்(47), கவி பாரதி (47), விஜயபாரதி (23), ஆறுமுகம்(40), உத்திரவேல் (32), சாமிநாதன் (40), பூவரசன்(22), திருவேங்கடம் (30) ஆகிய 8 பேர் காயமடைந்தனர்.

Vikravandi

இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

From around the web