கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கள்ளக்காதல் ஜோடி... வாணியம்பாடியில் பரபரப்பு!

 
Vaniyambadi

வாணியம்பாடி அருகே கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள தேங்காய்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (39). இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சந்திரசேகர் பெங்களூரில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

பூஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவன் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர், பூஜாவுடன் வாணியம்பாடிக்கு சென்றுள்ளார். அப்போது தேங்காய்பட்டறை பகுதியில் உள்ள உறவினர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் தோப்பில் பூஜாவுடன் தனி ஓலைக் குடிசை வீட்டில் தங்கி இருந்துள்ளார். 

dead-body

இந்த நிலையில் பூஜா காணாமல் போனதாக அவருடைய கணவர் பெங்களூரில் உள்ள ஒயிட் ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பூஜாவை  அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் பூஜா வாணியம்பாடியில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே பூஜாவை அழைத்து செல்ல அவருடைய குடும்பத்தினர் வாணியம்பாடிக்கு சென்றுள்ளனர். 

பின்னர் சந்திரசேகர் பூஜா மற்றும் அவர் குடும்பத்தினர் இடையே அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பூஜாவுக்கு அறிவுரையும் வழங்கி அவரை அழைத்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,  பூஜாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

Vaniyambadi PS

பின்னர் இதனை சற்றும் எதிர்பாராத சந்திரசேகர் திடீரென ஓடிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதை அறிந்த பூஜா அங்கிருந்த மற்றொரு கிணற்றில் குதித்துள்ளார். இதனை தொடர்ந்து இரு குடும்பத்தினரும் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றானர்.

From around the web