கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

 
Nammakal

நாமகிரிப்பேட்டை அருகே கல்லூரி மாணவி கிணற்றில்  குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது. இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதனிடையே தகவல் அறிந்து வந்த ஆயில்பட்டி போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicide

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். ஆசிகா கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்தனர். ஆனால் கோயிலில் வந்து சாமி கும்பிட்ட பிறகு அங்குள்ள கிணற்றை நோக்கி ஆசிகா செல்வதும், அவராகவே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Ayilpatty PS

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஆசிகாவுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web