6ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளி கைது!!

 
Sexual

கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் ஹட்டி பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 11 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளியிலிருந்து மதிய உணவுக்காகச் சென்ற மாணவியை சாக்லெட் தருவதாகச் சொல்லி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற சந்திரசேகர் என்ற நபர், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். சத்தம் போட்ட மாணவியின் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் திரண்டு வந்து கதவைத் தட்டியுள்ளனர்.

கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஹட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியை மீட்டு சந்திரேசகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.