உடற்பயிற்சி டிப்ஸ் தருவதாக கூறி... மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் போக்சோவில் கைது!!

 
YMCA

ஒய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ கல்லூரியின் முதல்வராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஆபிரகாம் (50) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு, இந்திய, ஆசிய அளவிலான போட்டிகளில் பல தங்கப் பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள், வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், பாடி பில்டிங் துறையில் மாவட்ட அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் முதல்வரான ஜார்ஜ் ஆபிரகாம் பயிற்சிக்கு வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக ஜிம் ஒர்க் அவுட் பயிற்சியும் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடற்பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்கு வந்த முதுகலை உடற்கல்வி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவிக்கு இரவில் போன் கால் செய்து உடற்பயிற்சி டிப்ஸ் தருவதாக கூறி செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

YMCA

இதனால், அந்த மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரை விசாரணை செய்த சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் முன்ஜாமீன் பெற்றார். அதன் பின்னர் சிறிது நாட்களிலேயே மீண்டும் கல்லூரிக்கு திரும்பினார். இந்த நிலையில் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி நிர்வாக குழு நேற்று சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் அளித்தது. 

அந்தப் புகாரில் கடந்த ஆண்டு பயிற்சிக்கு வந்த மாணவியரிடம் தொடர்ச்சியாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்தததாகவும், குறிப்பாக 18 வயது நிறைவடையாத ஒரு இளங்கலை மாணவியிடம் ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுப்பதாக மாலை நேரத்தில் ஜிம்முக்கு தனியாக வரச் செய்து அந்த மாணவிக்கு உடற்பயிற்சி எனச் சொல்லி க்ரெஞ்ச் எக்ஸர்சைஸ், லெக் எக்ஸர்சைஸ் என்ற பெயரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும் கல்லூரி நிர்வாகக்குழு புகார் அளித்திருந்தது.

POsco

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் மீது போக்சோ சட்டம் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி முதல்வர் சார்ஜ் ஆபிரகாமை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி ஜார்ஜ் ஆபிரகாமை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கல்லூரி நிர்வாக குழு அளித்த புகாரின் அடிப்படையில் ஜார்ஜ் ஆபிரகாம் பயிற்சிக்கு வந்த எத்தனை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்? எத்தனை ஆண்டு காலமாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்? என்பது குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web