அண்ணன் காதலியை திருமணம் செய்த தம்பி.. தொடர்ந்த உல்லாசத்தால் ஆத்திரம்.. ஸ்கெட்ச் போட்டு கொலை முயற்சி!!

 
Salem

மனைவியுடன் தகாத உறவில் இருந்த அண்ணனை, கொல்ல முயன்ற தம்பி, காட்டெருமை தாக்கி அண்ணன் சுய நினைவை இழந்ததாக போலீசாரிடம் நாடகமாடியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (26). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் எஸ்.புத்தூர் செல்லும் வழியில் சாலையோர பள்ளத்தில் படுகாயங்களுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். காட்டெருமை தாக்கி காயம் அடைந்ததாக கூறி அவரது தம்பி விவேக், வினோத்தை மீட்டு நாகலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத் படுகாயங்களுடன் கிடந்த எஸ்.புத்தூர் பகுதிக்கு சென்று அங்கு காட்டெருமையின் கால் தடங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர்.

Fight

இந்த பகுதியில் சமீபகாலமாக காட்டெருமை நடமாட்டம் கிடையாது என அவர்கள் தெரிவிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார், வினோத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

வினோத்துக்கும் அவரது தம்பி விவேக்கின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதாவது, திருமணத்துக்கு முன்பே இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. தம்பியின் திருமணத்துக்கு பிறகும் வினோத் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அறிந்த விவேக், தனது அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காத்திருந்தார்.

Yercaud PS

சம்பவத்தன்று கள்ளத் தொடர்பு சம்பந்தமாக எஸ்.புதூர் செல்லும் வழியில் விவேக்குக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் விவேக் அங்கு கிடந்த கல்லை எடுத்து வினோத்தின் தலையில் தாக்கினார். இதில் அவர் சுயநினைவு இழந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரை காட்டெருமை முட்டியதாக விவேக் அனைவரையும் நம்ப வைத்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். 

From around the web