தவறுதலாக மேலே உரசிய சைக்கிள்.. வியாபாரியை நிர்வாணப்படுத்தி அடித்த இளைஞர்கள்!! அதிர்ச்சி வீடியோ

மதுரை தெப்பக்குளம் அருகே சைக்கிள் உரசியதாக கூறி வியாபாரியை நிர்வாணபடுத்தி போதை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை தெப்பக்குளம் அடுத்து உள்ள அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் வியாபாரி சுந்தர் (60), இவர், சைக்கிள் மூலம் பிஸ்கட் பாக்கெட்களை கொண்டு சென்று தேநீர் கடைகளில் விநியோகித்து வருகிறார்.
இந்த நிலையில், அனுப்பானடி பேருந்து நிலையம் அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்ற இளைஞர் ஒருவர் மீது சைக்கிள் உரசிவிட்டதாகக் கூறி வியாபாரி சுந்தரிடம் 4 இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அந்த இளைஞர்கள் போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் வியாபாரியை சரமாரியாக தாக்கி நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான வியாபாரி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.