பெண்கள் விடுதி முன்பு சுய இன்பத்தில் ஈடுப்பட்ட வாலிபர்.. வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்த மகளிர் ஆணைய தலைவர்!
டெல்லியில் பெண்கள் விடுதி முன்பு ஒரு நபர் சுய இன்பம் செய்யும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் சமீப காலமாக பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லி ஹட்சன் லேன் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் 12ம் தேதி இரவு வேளையில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் பால்கனியில் நின்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் பெண்கள் முன் நின்று பார்த்து நோட்டமிட்டுள்ளார். தொடர்ந்து அந்த பெண்கள் முன்னர் ஆடையை களைத்து சுய இன்பம் செய்யத் தொடங்கியுள்ளார். இதானால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், இந்த செயலை வீடியோ எடுத்து புகார் அளித்துள்ளனர்.
அந்த வாலிபர் மீது இரண்டு புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை புகார் குறித்து எந்த பதிலும் தரப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தில் டெல்லி மகளிர் ஆணையம் களமிறங்கியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
हमें दो शिकायतें मिली कि Girls PG के बाहर एक लड़का रात में सड़क पर खड़ा होकर Masturbation करता है। दोनों वीडियो एक ही शख़्स की लग रही हैं। दिल्ली पुलिस को हाज़िरी समन जारी कर Action Taken रिपोर्ट माँगी है। ये मामला बेहद गंभीर है।
— Swati Maliwal (@SwatiJaiHind) June 26, 2023
Warning - Disturbing Content pic.twitter.com/vIga4CXHEf
அந்த பதிவில், சம்பவம் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டும் இதுவரை போலீசார் தரப்பில் பதில் ஏதும் இல்லை. இது போன்ற செயல்கள் அபாயகரமானவை. உடனடி நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், அப்பகுதி காவல் நிலைய அதிகாரியை நாளை (ஜுன் 28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.