ஏரியில் நிர்வாணமாக கிடந்த ஆண் சடலம்.. மதுபோதையில் நண்பன் வெறிச்செயல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 
chennai chennai

சென்னை பெரும்பாக்கம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கிய நிலையில் உடலை ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் (எ) தீஞ்சை சதிஷ். இவர் தற்போது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பரான தேனம்பேட்டையைச் பகுதியை சேர்ந்த மூர்த்தி (30) தற்போது ஒட்டியம்பாக்கம் பகுதியில் தாய், தந்தையுடன் தங்கி வசித்து வருகிறார். மூர்த்தி ஒட்டியம்பாக்கம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக, கள்ளத்தனமாக மதுபாட்டில்களை 24 மணி நேரமும் விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சதிஷ், அவர் காதலித்த பெண்ணை ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நண்பரான மூர்த்தி வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சதிஷ் தனது காதலியை அழைத்துச் செல்ல நண்பர் மூர்த்தி வீட்டிற்கு சென்று அங்கிருந்த செல்போன், ரூ.25,000 பணம் மற்றும் ஒரு ஸ்கூட்டி ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

murder

இதுகுறித்து நண்பர் மூர்த்தி தீஞ்சை சதிஷிடம் கேட்டதும் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். எடுத்த பணத்தை கேட்டதற்கு பிறகு தருகிறேன் என்று கூறிய தீஞ்சை சதிஷ் இருவரும் மது அருந்தலாம் என்று கூறி மூர்தியுடன் ஏரிக்கு சென்றுள்ளனர். நள்ளிரவு மூர்த்தி மற்றும் சதிஷ் இருவரும் ஒட்டியம்பாக்கம் ஏரியில் மது அறுந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் சதிஷ், மூர்த்தி இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரி வெட்டிகொண்டுள்ளனர். அதில் மூர்த்தி அவருடைய நண்பரான சதிஷின் முகம், தலை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.கொலை செய்த மூர்த்தி கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் தன்னுடைய வீட்டில் இருந்து எடுத்த ரூபாய் 25,000 பணத்தை திருப்பி தராததால் ஆத்திரத்தில் தீஞ்சை சதிஷ் கால் சட்டை ஆடையை கழட்டி ஆணுறுப்பு தெரியும்படி நிர்வாணமாக ஏரியில் வீசி சென்றுள்ளார்.

Police-arrest

பின்னர் கையில் வெட்டுப்பட்ட மூர்த்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மருத்துவர்கள் பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் ஒட்டியம்பாக்கம் சித்தேரி பகுதிக்கு சென்று உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக சடலமாக கிடந்த சதிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பெரும்பாக்கம் போலீசார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களாகிய இவரும் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி வெட்டிக் கொண்டதில் சாராய வியாபாரி மூர்த்தி நண்பனை சரமாரி வெட்டி படுகொலை செய்து விட்டு நிர்வாணமாக ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web