கள்ளக்காதல் உறவில் ஏற்பட்ட விரிசல்.. 2 குழந்தைகள் கொடூர கொலை.. படுகாயம் அடைந்த கள்ளக்காதலியும் பலி!!
பொன்னேரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள இருளிப்பட்டி கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவரிகா பார் (30) வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ரா பார் (21). இவர்களுக்கு சிவா (4) என்ற மகனும் ரீமா(1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுலு என்பவர் துவரிகா பார் வேலை செய்யும் அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதில் இவருக்கும் துவரிகா மனைவி சுமித்ரா பாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி இருளிப்பட்டியில் தனி அறையில் தங்கி வந்த குட்டுலு வீட்டுக்கு கள்ளக்காதலி சுமித்ரா பார் மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்றனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் 2 குழந்தைகளை வெட்டியும் கள்ளக்காதலியின் தலையை வெட்டி விட்டு குட்டுலு தப்பிச்சென்று விட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த சுமித்ரா பாரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ரா பார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தலைமறைவான குட்டுலுவை பிடிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
