அரசு விடுத்தில் கல்லூரி மாணவி கொலை.. குற்றவாளியை தேடி சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி.. மும்பையை அதிர வைத்த சம்பவம்!

 
Mumbai

மகாராஷ்டிராவில் அரசு விடுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சார்னி சாலையில் அரசுக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் விதார்பா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், 4வது தளத்தில் தங்கி படித்து வந்தார். இவரின் அறையில் உள்ள மற்ற பெண்கள் ஊருக்கு சென்ற நிலையில், சம்பவத்தன்று தனியாக அறையில் இருந்துள்ளார். கீழறையில் உள்ள பெண் தனியாக இருக்க வேண்டாம் என அழைத்தும் கூட தனியாக இருந்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நீண்ட நேரமாக அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்ட விடுதி நிர்வாகம், என்ன செய்கிறாள் என அவரது அறைக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் இருந்த அறை வெளியில் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெளியே செல்லும் பதிவு புத்தகத்தில் அவர் சென்றதற்கான அடையாளங்கள் இல்லாத நிலையில், எங்கே சென்றிருப்பார் என திகைத்து நின்றனர்.

Rape

தொடர்ந்து அறையில் ஜன்னலை திறந்து பார்த்த போது, அவர் துப்பட்டாவால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பதைபதைப்போடு போலீசாரை தொடர்பு கொண்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துப்பட்டாவால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பெண்ணின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை நடத்தினர். அதில் கடைசியாக கீழறையில் உள்ள பெண் தன்னுடன் தங்குமாறு அழைத்த பேசியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் விடுதியில் காப்பாளராக பணியாற்றிய கனோஜியா பிரகாஷ் என்பவர் விடுதியில் இல்லை. இதனால் போலீசார் கனோஜியா பிரகாஷை சந்தேகத்திற்கிடமான இடத்தில் வைத்து விசாரணையை தொடங்கினர்.

train-suicide

அதில், திங்கட்கிழமை இரவு இளம்பெண் தனியாக தூங்கிய நிலையில், செவ்வாய்கிழமை காலை 4 மணியளவில் காப்பாளரான கனோஜியா பிரகாஷ், லாண்ட்ரி துணிகளுடன் வெளியே சென்றதும் திரும்பி வரவில்லை என்பதும் தெரியவந்தது. கனோஜியா தான் குற்றவாளி என 90 சதவீதம் முடிவு செய்த போலீசாருக்கு ட்விஸ்ட் காத்திருந்தது. கனோஜியாவை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போலீசாருக்கு, சாரினி சாலை அருகே கனோஜியாவின் சடலம் கிடைத்துள்ளது. 

இவரது சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், வன்கொடுமை செய்தது கனோஜியா தானா அல்லது வேறு நபரா என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனோஜியா தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பல சந்தேகங்களுடன் இருக்கும் இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளி யார் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரான லோதா, சம்பவம் நடந்த விடுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

From around the web