சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை.. மகன் எடுத்த வீடியோவால் போலீசில் சிக்கிய 68 வயது தந்தை!!

 
Rape

டெல்லியில் தந்தையைக் கண்காணிப்பதற்காக மகன் வைத்த கேமராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிப் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுஉள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் 68 வயது முதியவர் தனது 40 வயது மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவருக்கு மத மாந்தீரக செயல்களில் ஈடுபாடு அதிகம். இந்த முதியவரின் வீட்டின் அருகே ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் 16 வயது சிறுமி உள்ளார்.

அந்த வீட்டிற்குள் தனது மாந்திரீக செயல்களை செய்வது தொடர்பாக முதியவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ்வாறு பழகி 16 வயது சிறுமி தனியாக இருக்கும் போது இந்த முதியவர் அத்துமீறி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வாறு சிறுமியை தனியே அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், இதை வெளியே கூறினால் அவ்வளவுதான் என மிரட்டி வந்துள்ளார். 

video

இந்த நிலையில் அந்த 68 வயது நபருக்கும் அவரது மகனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது. தனது தந்தையின் நடவடிக்கையின் மீது மகனுக்கு சந்தேகம் வரவே தந்தைக்கு தெரியாமல் செல்போனை ரகசியமாக வைத்து சிறுமியிடம் அவர் மேற்கொண்ட பாலியல் அத்துமீறலை படம்பிடித்துள்ளார். பின்னர் தனது தந்தை மீது இருந்த வெறுப்பின் காரணமாக இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு பகிர்ந்து காட்டியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ந்து போன சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், 68 வயது முதியவர் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் முதியவரின் குற்றங்களை அம்பலமானது.

Police-arrest

இதைத் தொடர்ந்து 68 வயது முதியவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், வீடியோவை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்த மகனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தது.

From around the web