அதிகாலையில் 5 கிமீ பயணம்.. கணவனை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய மனைவி.. முந்திரிக்காட்டில் ஷாக்!!

 
Ariyalur

அரியலூரில் முறை தவறிய உறவில் இருந்த மனைவியை கணவன் கண்டித்ததால் தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் வனத்துறைக்குச் சொந்தமான முந்திரி காட்டில் கடந்த வாரம் மனித உடல் ஒன்று எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அரியலூர் மாவட்டம் வடகடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் என்று தெரியவந்துள்ளது. இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவி அனுப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Murder

சுரேஷ் மனைவி அனுப்பிரியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது சித்தப்பா மகன் வேல்முருகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து கணவர் சுரேஷை ஊருக்கு வரவழைத்து, அங்கிருந்து விடியற்காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கொலை செய்யப்போகும் இடத்திற்கு அனுப்பிரியா கூட்டிச் சென்றுள்ளார். இடம் வந்தவுடன், மயக்கம் வருவது போல் உள்ளது என பைக்கை நிறுத்தி நாடகம் ஆடியுள்ளார் அனுப்பிரியா.

Udayarpalayam PS

இதனையடுத்து அங்குப் பதுங்கியிருந்த வேல்முருகன், சுரேஷ் சுதாரிப்பதற்குள் சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை வெண்மான்கொண்டான் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் சாக்குப் பையில் மூட்டை கட்டிப் போட்டுள்ளனர். மறுநாள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தொடர்ந்து கொலையை மறைக்க, இறந்த சுரேஷின் செல்போனை சென்னைக்கே கொண்டுவந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இறந்த சுரேஷின் மனைவி அனுப்பிரியா மற்றும் அவருடைய ஆண் நண்பர் வேல்முருகன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன் முறை உறவுக்காரருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு கணவனையே மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web