மதுபோதையில் 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற 19 வயது இளைஞர்.. நத்தம் அருகே பரபரப்பு!

 
Natham

நத்தம் அருகே 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பெரியம்மாள் (65). கணவர் இறந்து விட்டார். இவரது மகனுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரியம்மாள் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். 

murder

இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், இசக்கிராஜா, ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிச்சைமணி மகன் சரவணக்குமார் (19) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து சரவணக்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள கோவில் விழாவிற்கு சென்றேன். நன்கு மதுகுடித்துவிட்டு கிடா விருந்தில் கலந்து கொண்ட நான் திரும்ப சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது அருகில் தூங்கி கொண்டிருந்த பெரியம்மாளை கற்பழிக்க முயன்றேன். அவர் சத்தம் போடவே வலுக்கட்டாயமாக எனது ஆசையை நிறைவேற்றினேன். 

Natham PS

அதன்பிறகு அவர் வெளியில் என்னை பற்றி கூறிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை திருடிவிட்டு எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். எப்போதும் போல் வழக்கம்போல் எனது வேலையை செய்து வந்த நிலையில் போலீசார் அடிக்கடி எனது நடவடிக்கையில் சந்தேகப்பட்டு விசாரித்ததில் நடந்த விபரங்களை கூறினேன் என்றார்.

From around the web