17 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை.. விரும்பத்தகாத வீடியோ வைரலானதால் விபரீத முடிவு!

 
UP

உத்தரபிரதேசத்தில் 17 வயது பெண் ஒருவர், தனது விரும்பத்தகாத விடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், லக்ஷ்மிபூர் கேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர், கடந்த 3-ம் தேதி தாய் மற்றும் சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

suicide

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 20 வயது இஸ்லாமிய இளைஞர், அவரது சகோதரர்கள், தந்தை ஆகிய 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இஸ்லாமிய வாலிபரும் அவரது குடும்பமும், பதின்பருவ பெண்ணைத் திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதாகத் தெரிவிக்கிறார்கள்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்ட போது பெண்ணின் குடும்பத்தினரும் ஊராரும் குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் வீட்டைத் தாக்கத் தொடங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதனைத் தடுத்து நிறுத்தினர். மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளர் கிராமத்தினரிடம் கலவரத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார்கள். 


இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் கடை, பொது நிலத்தில் இருந்ததால் அது இடிக்கப்பட்டது. பெண்ணின் சகோதரி, குற்றம் சாட்டப்பட்டவர் நீண்ட நாள் மிரட்டி வந்ததாகவும் அதனாலேயே பயந்து அவர் அந்த முடிவுக்கு சென்றிருப்பார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

From around the web