தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 13 வயது சிறுமி.. விரக்தியில் எடுத்த விபரித முடிவு!

 
Palani

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு தேவதர்ஷினி (13) என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர்.

Suicide

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதுள்ளது. இதனால் கோபமடைந்த கவிதா, பொள்ளாச்சி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் சிறுமி தேவதர்ஷினி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தனது தாயாரின் சேலையால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Palani Town PS

இதுகுறித்து பழனி நகர போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதை பார்த்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web