கணவரின் கள்ளக்காதலியை பழிவாங்க மகளை கொலை செய்த மனைவி.!

 
wife-murder-husband-second-wife-daughter

கணவரின் கள்ளக்காதலியின் மகளை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருக்கு கனகா என்கிற மனைவியும் வினு என்கிற மகனும், கனி என்கிற மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி வனிதாவுடன்  வசித்து வருகிறார். கனகாவும், வனிதாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிப்பதால் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

இந்த நிலையில், வினதாவின் கணவர் கமலகண்ணனுக்கும் கனகாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கமலகண்ணன் கனகாவின் மகள் கனியை தனது மகளைபோல் பாவித்து படிப்பு செலவில் இருந்து துணிகள் வாங்கி கொடுப்பது முதல் பல்வேறு செலவுகளை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக வனிதாவுக்கும், அவரது கணவர் கமலகண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த வனிதா, கனியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி சண்முகநாதன் வேலைக்கு திருப்பூர் சென்றார். கனகா திங்களூரில் உள்ள தனியார் மில் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் சிறுமி கனி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கனியை கழுத்து நெரித்து வனிதா கொலை செய்தார். பின்னர் கனி விளையாடிய போது தவறி கீழே விழுந்து உயிரிழந்து விட்டதாக நாடகம் ஆடினார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கனியை வனிதா கொலை செய்த்து அம்பலமானது. இதைத்தொடர்ந்து, வனிதாவை கைது செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அந்ந தீர்ப்பில், வனிதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலைக்கான தடயங்களை மறைத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

From around the web