பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்ற மனைவி.. உணவு கொடுக்க வந்த உறவுகார சிறுமியை கர்ப்பமாக்கிய கணவன்!!

 
Saleem-Basha

ராணிப்பேட்டை அருகே மனைவி 2-வது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்ற சமயத்தில், உணவு கொடுக்க வந்த உறவுக்கார  சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை அம்சா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சலீம் பாஷா (24). இவர், அதே பகுதியில் கட்டிடங்களுக்கு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், மனைவி 2-வது பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

rape

இந்த நேரத்தில் அதே பகுதியில் உள்ள சலீம் பாஷாவின் உறவினர்கள் அவருக்கு தேவையான உணவை 14 வயது சிறுமியிடம் நாள்தோறும் கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி சலீம் பாஷா சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவதாக கடுமையாக மிரட்டியுள்ளார்.

சிறுமிக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்ற போது, 6 மாத கர்ப்பமாக உள்ளதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்த போது உண்மை தெரியவரவே, சிறுமியின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர்.

Ranipet-womens-PS

புகாரின் பேரில் சலீம் பாஷாவை கைது செய்த ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web