ஆரணியில் வாலிபர் வெட்டி படுகொலை... கஞ்சா வாங்கும்போது விபரீதம் 

 
chennai

சோழவரம் அருகே கஞ்சா பிரச்சனையால் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஆரணி இருளர் காலனியை சேர்ந்தவர் சின்னமணி (30). இவர் ஆரணியில் உள்ள பழைய ஆனந்தா தியேட்டர் அருகே சால்னா கடை ஒன்றை நடத்தி வருவதுடன், கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு பெரியபாளையம் தண்டுமாநகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சரத்(22) இவரது நண்பர் மாரிமுத்து என இருவரும் இருசக்கர வாகனத்தில் சின்னமணி வீட்டிற்கு வந்தார்களாம். 

murder

வீட்டில் கஞ்சா வாங்கும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சரத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்னமணியை வெட்ட முயன்றாராம். ஆனால், சின்னமணி சுதாரித்துக் கொண்டு தன்னிடம் இருந்த கத்தியால் சரத் உள்ளிட்ட இருவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், சரத் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். 

மேலும், இவரது நண்பர் மாரிமுத்து வெட்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பித்து வீட்டின் பின்புறம் இருந்த இருட்டில் ஓடி மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. சரத் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சின்னமணியை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். 

arrest

பின்னர், பலியான சரத் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரத் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் பெரியபாளையத்தில் இருந்து ஆரணிக்கு வந்து சின்னமணியின் சால்னா கடையை அடித்து நொறுக்கினார்கள். கைது செய்யப்பட்ட சின்னமணியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கஞ்சா பிரச்சனையால் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web