வடமாநிலமாக மாறிவரும் தமிழ்நாடு... 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. உதகையில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Jharkand workers

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் உதகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையை அருகே உள்ள தேவர்சோலை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Rape

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு வடமாநில வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி கதறி அழுதுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட போது, வடமாநில இளைஞர்கள் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

arrest

தேவர்சோலை பகுதியில் உள்ள எஸ்டேடில் கூலி தொழிலாளியாக உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராணா ஓரான் (30), பாபுலான் ஓரான் (30) ஆகியோர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web