இதெல்லாம் பேராசிரியர் செய்யுற வேலையா?போலீசார் வழக்குப் பதிவு!

 
Kannan Kannan

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணி புரியும் துணைப் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை விவகாரம் குறித்து பல்கலைக் கழக அளவில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக துணைவேந்தர் என். சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.

பேராசிரியர் ஒருவரே உடன் பணி புரியும் துணைப் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் திருநெல்வேலி - பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் கண்ணனை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

From around the web