நடிகை முன் இளைஞர் சுயஇன்பம்.. வீடியோ வெளியிட்டு போலீசில் புகார்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Nandhita

கேரளாவில் ஓடும் பேருந்தில் நடிகை ஒருவருக்கு நடைபெற்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா சங்கரா என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் உட்கார்ந்த சவாத் ஷா என்பவர் நடிகையிடம் பேசிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நடிகையின் மேல் கை வைத்ததாகவும் அதுமட்டுமின்றி இன்னொரு கையால் சுய இன்பத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

Nanditha

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நந்திதா உடனே செல்போனை எடுத்து அவரை வீடியோ எடுத்தார். மேலும் அவர் கத்தி கூச்சலிட்டு வாக்குவாதம் செய்ததை அடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் அந்த இளைஞரை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

அப்போது அவர் தப்பிக்க முயன்ற போது பேருந்தில் இருந்த சக பயணிகள் சவாத் ஷா என்ற இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பேருந்தில் இந்த பிரச்சனையில் தனக்கு உதவியாக இருந்த சக பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்து நடிகை நந்திதா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

From around the web