கார்லயே ட்ரெஸ் மாத்த சொல்வாங்க.. பிரபல நடிகை வேதனை!
படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான சூழல்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை காயத்ரி ஷங்கர் பேசியுள்ளார்.
2012-ம் ஆண்டு வெளிவந்திருந்த ‘18 வயசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது இருந்தாலும், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தான். இந்த படத்தின் மூலம் காயத்ரி வேற லெவல் பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம்.
அதனை தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமனிதன். இந்த படத்தில் காயத்ரி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குடும்ப தலைவியாக நடித்திருந்தார்.
மேலும் பல படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் காயத்ரி. திரைப்படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்தாலும், நிஜத்தில் மாடர்னான பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் காயத்ரி தற்போது நேர்காணல் ஒன்றில் பேசும் போது படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான சூழல் குறித்து பேசியுள்ளார். அதில் நீங்க எதையாவது மாத்தணும் நினைச்சா எதை மாத்துவீங்க என கேட்கப்பட்ட போது, ஷுட்டிங் ஸ்பாட்டில் நான் மட்டும் பெண்ணாக இருக்கும் போது சில நேரங்களில் பாத்ரூம் கூட இருக்காது. இதை தயாரிப்பு தரப்பும் யோசிக்காது. இது நம்ம ஆரோக்கியத்தை பாதிக்க கூட விஷயம். இதை தான் மாத்தணும் நினைக்கிறேன்.
மேலும் சில படங்களில் நடிக்கும் போது லொகேஷன் விட்டு வேறொரு இடத்துக்கு செல்லும் போது நடுவிலே வண்டியை நிப்பாட்டி மாண்டேஜ் ஷுட்டிங் எடுக்கலாம் சொல்வாங்க. அதுக்காக கார்லயே டிரெஸ் மாத்த சொல்வாங்க. அட்லீஸ்ட் நடிகைகள் டிரெஸ் மாத்த ஒரு ரூம் அரேஜ் பண்ணி தரலாம். நம்மோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். இவ்வாறு அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். காயத்ரியின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.