காந்தி வழியில நீங்க, நேதாஜி வழியில நான்.. வைரலாகும் ‘இந்தியன் 2’ டிரெய்லர்!

 
Indian 2

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Indian 2

இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடித்து இருக்கின்றனர். முன்பு வெளியான ‘இந்தியன்’ படத்தில் ஊழலுக்கு எதிரான அப்பா மற்றும் ஊழல் செய்யும் மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது இதுவரை வெளியான பட அப்டேட்களில் இருந்து தெரிகிறது.

அதாவது, சேனாதிபதி கம்பேக் எனச் சொல்லி, ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூனில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கதறல்ஸ்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது.

From around the web