உண்மையான சந்திரமுகிய பார்க்கபோறீங்க.. வெளியானது ’சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர்!

 
Chandramukhi 2

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

Chandramukhi 2

இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி ‘சந்திரமுகி 2’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள், போர் காட்சிகள் என்று பிரமாண்டமான காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From around the web