திக்குமுக்காடுற அளவிற்கு அநீதி படத்தை கொண்டாடுகிறீர்கள்.. நடிகர் காளி வெங்கட் நெகிழ்ச்சி!

 
Kali venkat

‘அநீதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியான படம் ‘அநீதி’. இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா, பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

Aneethi

இந்தப் படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார் வசந்த பாலன். ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கடந்த 15-ம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் காளி வெங்கட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “திக்குமுக்காடுற அளவிற்கு அநீதி படத்தை கொண்டாடுகிறீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த வசந்த பாலன் அவர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஷங்கருக்கும் என் நன்றி. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு பேராதரவு கிடைத்திருக்கிறது என்று தெரிகிறது. உங்கள் அனைவருக்கும் திருப்பி என்ன கொடுப்பது என்று தெரியவில்லை” என்று பேசினார்.

From around the web