ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் யோகி பாபு.. வைரல் வீடியோ!

 
Yogibabu

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, மான் கராத்தே, காக்கி சட்டை, மெர்சல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் ஜான்சன் இயக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து ‘காண்டிராக்டர் நேசமணி’ மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து ‘லோக்கல் சரக்கு’ உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Yogibabu

மேலும், ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்திலும் நடிக்கிறார். தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். அதோடு விபின் தாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், யோகிபாபு ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், நீங்க குண்டா இருப்பது தான் அழகே, தயவு செய்து ஸ்லிம் ஆகி விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஒரு சிலரோ, ஒர்க் அவுட் செய்து சூரி மாதிரி சிக்ஸ் பேக் வைக்கப் போகிறீர்களா என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். யோகிபாபுவின் இந்த ஒர்க் அவுட் வீடியோ தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது.

From around the web