அப்பா பர்த்டேக்கு வருவாரா.. ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

 
Amaran

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

‘அயலான்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Amaran

‘அமரன்’ திரைப்படம் வருகிற 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமரன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை பான் இந்தியா நட்சத்திர நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் கமல் ஹாசன், மலையாளத்தில் டோவினோ தாமஸ், தெலுங்கில் நானி, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சிவராஜ் குமார் ஆகியோர் 'அமரன்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.    

டிரெய்லர் எப்படி? 

மறைந்த மேஜர் முகுந்தின் உண்மையான வீடியோ காட்சியிலிருந்து டிரெய்லர் தொடங்குகிறது. “கடலுக்கும், ஆகாசத்துக்கும் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்” என சாய்பல்லவியின் பிரிவின் வார்த்தைகள் கவனிக்க வைக்கின்றன. சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை பிறப்பது, அவர் ராணுவத்தில் சேர்வது, அவரின் உடல்வாகு, மெனக்கெடல் என பலவற்றையும் டிரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி, குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளின் முழக்கம் மறுபக்க காட்சிகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது டிரெய்லர். ஓரிடத்தில் இந்திய ராணுவத்தினர் ‘பஜ்ரங் பலிக்கே ஜெய’ என முழக்கமிடுகின்றனர்.

From around the web