நடிகர் கஞ்சா கருப்பு வீட்டை சூறையாடியது யார்? பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை மதுரவாயலில் நடிகர் கஞ்சா கருப்பு வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, விருது பதக்கங்கள், பணம் உள்ளிட்டப் பொருட்கள் காணாமல் போனதாகவும், வீடு சூறையாடப்பட்டிருபப்தாகவும் வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் செய்துள்ளார்.
போலீசாருடன் வீட்டுக்குச் சென்று வீட்டின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து கதறி அழுத காட்சி வெளியாகியுள்ளது. அப்போது அவர் ஒவ்வொரு அறையாகச் சென்று பொருட்களை காணோம் என்று கூறுவதும், கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாங்கிய விருதுகளை எல்லாம் திருடிட்டுப் போயிருக்காங்க என்றும் கதறியபடியே கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் எனக்கு படபடன்னு வருது, நான் ஆஸ்பத்திரிக்குப் போறேன், நீங்க பாருங்க சார் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஏற்கனவே வீட்டு உரிமையாளர் நடிகர் கஞ்சா கருப்பு மீது புகார் தெரிவித்து இருந்த நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டை உடைத்துப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார் என்று கஞ்சா கருப்பு போலீசாரிடம் புகாரளித்துள்ளது திரைத்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.