விஷாலின் இந்த நிலைக்கு யார் காரணம்! பத்திரிக்கையாளர் பகீர் தகவல்!
மதகஜராஜா பட முன் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விஷால் கை நடுக்கத்துடன், வாய் குளறியபடி பேசினார். அவரை அப்படிப் பார்த்த அனைவருக்கும் மிகவும் வேதனையாக இருந்தது. இந்நிலையில் இயக்குனர்கள் பாலா, மிஷ்கின் மற்றும் விஷாலின் நண்பர்கள் நந்தா, ரமணா ஆகிய நால்வரும் தான் விஷாலின் இந்த நிலைக்குக் காரணம் என்று பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.
பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு மாறு கண் உள்ளது போல் வேடம் இருந்தது. அப்படி தெரிவதற்காக கண்ணில் ஒரு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு தலைவலியால் மிகவும் அவதிப்பட்ட விஷால் பல்வேறு மருந்துகளை உட்கொண்டார். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விஷாலுடன் வந்து சேர்ந்து கொண்ட நந்தா, ரமணா ஆகிய இருவரும் விஷாலை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைத்து விட்டனர். விஷாலின் பிரச்சனைகள் வேறு யாருக்கும் தெரியாமல் போனது.
துப்பறிவாளன் 2 படத்தின் போது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பெரிய சண்டை ஏற்பட்டு இருவரும் வெளிப்படையாகத் திட்டிக் கொண்டனர். இந்தப் பிரச்சனைகளிலிருந்து மீளுவதற்காக விஷால் எடுத்த சில முடிவுகள் தான் தற்போதைய நிலைக்குக் காரணம் என அந்தணன் கூறியுள்ளார்.