தனுஷ் vs சூர்யா - வெற்றிமாறனின் அடுத்தப் படத்தில் யார்?

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படம் 25வது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. வெற்றிமாறனை பல்வேறு இயக்ககங்களைச் சார்ந்தவர்களும் கொண்டாடினார்கள். இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய அடுத்த படத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
விடுதலை 2 படம் தங்களுக்கு மிகவும் லாபகரகமாக இருந்ததாகவும் நடிகர் சூரி, விஜய்சேதுபதி, இளையராஜா, வெற்றிமாறன் மற்றும் படப்பிடிப்புக்குழுவினருக்கு நன்றி என்றும் அந்த அறிக்கையில்கூறியுள்ளனர்.
சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கி வரும் நிலையில் விடுதலை 2 படத்தின் தயாரிபாளரின் இந்த அறிவிப்பு வாடிவாசல் படத்தைப் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது. வாடிவாசல் படம் தள்ளிப் போகிறதா? அல்லது வாடிவாசல் படத்தை முடித்து விட்டுத் தான் தனுஷ் படத்திற்கு வருகிறாரா வெற்றிமாறன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
தனுஷ் இட்லிகடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். நிலவுக்கு என்னடி என்மீது கோபம் படத்தை இயக்கியும் வருகிறார். இந்திப்படம் ஒன்றிலும் நடிப்பதற்கு தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சூர்யா குறுகியக்காலப் படமாக ஆர்ஜே பாலாஜி படத்தில் நடித்து வருகிறார். அதை அடுத்து வாடிவாசலுக்கு மீண்டும் வந்து விடுவார் என்றும் தெரிகிறது. வாடிவாசல் முடித்து விட்டுத் தான் தனுஷ் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் எனத் தெரிகிறது.