விடாமுயற்சி படம் ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸ்?
Mar 2, 2025, 08:30 IST
அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா காசாண்ட்ரா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான படம் விடாமுயற்சி. கலவையான விமர்சனங்களுடன் வெளியான இந்தப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆங்கிலப்படங்களுக்கு நிகரான கதையமைப்பு, காட்சிகள், படமாக்கம் என சிறப்பான தரத்தில் இயக்கி இருந்தாலும், கதைக்களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒட்டாமல் போய்விட்டது.
ஆனால் விடாமுயற்சி ஓடிடி தளத்தில் வெளியாகும் போது குடும்பத்தோடு படம் பார்ப்பவர்களுக்கு விடாமுயற்சி கண்டிப்பாக பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை மார்ச் 3ம் தேதி விடாமுயற்சி வெளியாக உள்ளது என்ற தகவல் வந்துள்ளது.
