தனுஷின் ‘குபேரா’ படத்தின் டீசர் எப்போது ? அப்டேட் கொடுத்த படக்குழு!

 
Kubera

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்தின் டீசர் அப்டேட் குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.

'ராயன்' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Kubera

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனாவின் கேரக்டர் அறிமுக வீடியோ வெளியாகியது. படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை மற்றும் பல இடங்களில் நடைப்பெற்ற வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராஷ்மிகா மந்தன்னாவின் கேரக்டர் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில் ராஷ்மிகா ஓர் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பெட்டியை தோண்டி வெளியே எடுக்கிறார். அப்பெட்டி முழுவதும் பணம் நிறைந்து இருக்கிறது. அவர் அந்த பெட்டியை திறந்து சரிபார்த்து விட்டு , சந்தோஷத்துடன் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லும்படி இடம்பெற்றதால் இந்த காட்சி இணையத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம் ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் டீசர் வரும் 15-ம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளது. இதேபோல திரைப்படம் வரும் பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இறுதிக் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web