அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்!!
அஜித்குமார் நடிக்க உள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வசூல் ரீதியாக 260 கோடிக்கு மேல் அள்ளி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அப்படத்தின் கதை பிடிக்காததால் அதில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். அதனையடுத்து, அவரது படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்துவந்தது. அஜித் ரசிகர்கள் பட அறிவிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.
இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், மகிழ்திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த வருடம் கலகத்தலைவன் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குநர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை, ஐதராபாத், ஆந்திரா, மலோசிய ஆகிய 4 இடங்களில் தான், இந்த படத்தின் ஷீட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.