பிரபல நடிகை செய்த காரியம்... இணையத்தில் வலுக்கும் கண்டன குரல்.. காரணம் என்ன?

 
Ananya Pandey

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை அனன்யா பாண்டே சிகரெட் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2019-ல் வெளியான ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. இதன் பின்னர் ’பதி பட்னி அவுர் வோ’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரிய வரவேற்பை கொடுத்தது. மேலும் பிலிம்பேர் விருதையும் வென்றுகொடுத்தது.

இதனைத் தொடர்ந்து, பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான ‘லைகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்தும் நடித்தார். தற்போது இவர் ‘ட்ரீம் கேர்ள் 2’ படத்தில் ஆயுஷ்மான் குரோனாவுக்கு ஜோடியாகவும், 'கோ கயே ஹம் கஹாம்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அனன்யா புகைப்பிடிப்பது போன்ற ஒரு படம் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ananya Pandey

நடிகை அனன்யா பாண்டேயின் உறவினரான அலன்னா என்பவருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான மெகந்தி விழாவில் நடிகை அனன்யா பாண்டே நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் தோழிகளுடன் சேர்ந்து சிகரெட் பிடித்துள்ளார்.

ஆனால் Reddit பயனர் ஏற்கனவே இந்த படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அனன்யா புகைப்பிடிப்பவராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Was not expecting Ananya to be a smoker. Love how these Nepo kids brag about being such health freaks...
by u/nycdesistudent in BollyBlindsNGossip

"இது உங்களை அல்லது வேறு யாரையும் எப்படிப் பாதிக்கிறது? நீங்கள் புகைப்பிடிக்காதவராகவும், மது அருந்தாதவராகவும் இருந்தால் உங்களுக்கு நல்லது. ஆனால் வேறொருவரின் வாழ்க்கையில் உங்கள் மூக்கை நுழைப்பதை நிறுத்துங்கள்" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

From around the web