குஷ்புக்கு என்னாச்சு..? மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
Khushbu

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90-களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார்.

Khusboo

இந்நிலையில் நடிகை குஷ்புக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக அவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதில், “நான் ஏற்கனவே சொன்னது போல் புளூ காய்ச்சல் என்பது மிகவும் மோசமானது. அது என்னை சமீபத்தில் பாதித்துவிட்டது. காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நான் அதிர்ஷ்டவசமாக அப்பல்லோ மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்று வருகிறேன்.

உங்கள் உடல் சோர்வாக இருந்தால் தயவு செய்து அதன் அறிகுறியை புறக்கணிக்காமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.

From around the web