சீமானுக்கு ஆதரவாக கஸ்தூரி என்ன சொல்றாங்க ?

 
kasthuri

நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வன்முறை புகாரையொட்டி நீதிமன்ற ஆணை பிறப்பித்ததை அடுத்து காவல்துறையினர் சீமானை விசாரித்துள்ளனர். இந்நிலையில் சீமான் கொடுத்த பேட்டியில் பணம் பெற்றுக் கொண்டு விருப்பத்துடன் தன்னுடன் உறவுக்கு சம்மதித்தார் என்ற பொருள்படும் வகையில் கூறியிருந்தார். ஆனால் அதை அவர் கூறியிருந்த விதம் சுற்றியிருந்த பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. சீமானின் இந்தப் பேட்டிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

நடிகை கஸ்தூரி சீமானுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  “விருப்ப உறவுக்கும் கற்பழிப்புக்கும் வித்தியாசம் இல்லையா? திருமண ஆசை காட்டி ஏமாற்றி உறவுக்கொண்டு பிரிந்து விட்டால் குற்றம் .... அப்போ இங்கு பல பெரிய மனிதர்கள் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி பிள்ளை பெற்று பெரியாளாக்குவது? அதுக்கு பேரு என்ன ?” என்று கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

From around the web